மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றம் ஆராய்ந்துகொண்டிருந்த வேளை உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் செனெட் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக சபையின் அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
நீதித்துறை சீர்திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியான மொரேனாவிற்கு தேவையான வாக்குகள் கிடைத்திருந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.
எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளும்கட்சிக்கு ஆதரவை வெளியிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக மெக்சிக்கோவின் பதவி விலகும் ஜனாதிபதியின் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு மாணவர்களும்,நீதித்துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சீர்திருத்த திட்டத்தினால் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.