ஊடக சுதந்திரத்தைப் பறித்து விடக்கூடாது-சுமந்திரன்

ஊடக சுதந்திரத்தைப் பறித்து விடக்கூடாது

ஊடக சுதந்திரத்தைப் பறித்து விடக்கூடாது

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தின் மூலமாக முறைப்பாடுகளை கண்காணிக்கும் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த தமிழ் தேசிய கூட்மைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், இந்த சட்டத்தினால் தகவல் அறியும் சட்டமூலம் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை அமைச்சர் நாமல் ராஜபக்சே ஆரம்பித்து வைத்தார். இதன் போது எதிர்க்கட்சியின் சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.

சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில், அதில் நீதி அமைச்சர் அலி சப்ர் சில திருத்தங்களை முன்வைத்தார்.இதன்போது எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பை கோராத நிலையில், அந்த சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்படதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.