இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

409 Views

இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கன்னியாகுமரி கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவல்படையினரால் குறித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு தமிழகத்தின் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

குறித்த படகு சிலாபத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகும் மேலதிக விசாரணைக்காக இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Tamil News

Leave a Reply