13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி

530 Views

வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி

13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று  மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பேரணியானது வவுனியா பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக மாவீரர் ஒருவரின் சகோதரன் ஈகைச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து பிற்பகல் 2. 30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

SAT 0017 1 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி

ஏ9 வீதி வழியாக சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் பேரணி நிறைவுற்றது. 13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த தினங்களில் வவுனியாவில் வாகனப் பேரணியினையும் மக்கள் சந்திப்புக்களையும் முன்னெடுத்திருந்த நிலையிலேயே இன்று பேரணி இடம்பெற்றது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தி வருகின்றது.

SAT 0068 2 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி

குறித்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் மற்றும் கட்சியினது சட்ட ஆலோசகர் காண்டீபன்,  ஊடக பேச்சாளர் சுகாஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Tamil News

Leave a Reply