வவுனியாவில் பாரிய மரங்கள் இரவிரவாக வெட்டி கடத்தல்

490 Views

மரங்கள் இரவிரவாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது

வவுனியாவில் பாரிய மரங்கள் இரவிரவாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது. வவுனியா – பனிச்சங்குளத்தின் குளகட்டில் இருந்த பாரிய மருத மரங்களை இரவோடு இரவாக வெட்டி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளத்தின் குளக்கட்டில் இருந்த பாரிய இரண்டு மருத மரங்களை இனந்தெரியாத நபர்கள்   வெட்டி, வெட்டிய குற்றிகளை கொண்டு சென்றுள்ளனர்.

மரங்கள் இரவிரவாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கும் போது  குறித்த கிராம மக்கள்  காவல்து றையினரின் அவசர இலக்கமான 119 இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி சம்பவத்தை கூறிய போதும்,  காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மரங்கள் இரவிரவாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது

தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பகுதியிலுள்ள கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply