தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் நீரிழ் மூழ்கியுள்ளன தம்பலாகாமம் , கிண்ணியா, மூதூர், திருகோணமலை நகரம், கந்தளாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (16) காலை முதல் மழை பெய்துள்ளது. பெய்து வரும் கனமழை காரணமாக, அப்பகுதியிலுள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், அப்பகுதிகளின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.



