இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப்பொருட்களைக் கடத்துவதற்குத் திட்டமிட்ட, தமிழகத்தைச் சேர்ந்த ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் செயற்பாட்டாளர் உட்பட நான்கு நபர்கள் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த போதைப்பொருள் தொகை தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களும் போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக நாகப்பட்டினம் சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை மற்றும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயற்பட்டமை காரணமாக குறித்த நபரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்குவதாக த.வெ.க நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.



