இலங்கை: கள்ளச்சந்தை, மாபியாக்களின் பிடியில் பல எரிபொருள் நிலையங்கள்

மாபியாக்களின் பிடியில் பல எரிபொருள் நிலையங்கள்

பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கள்ளச்சந்தை மாபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சாதாரண மக்கள் எரிபொருட்களை பெறுவதை அவர்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

இதன்போது எரிபொருள் நிலையங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்த்து, மக்கள் எரிபொருளை பெறுவதை இலகுபடுத்துவதற்காக தங்களால் இயன்றதை செய்வதாக அரச அதிபர் உறுதியளித்ததாக இந்தச் சந்திப்பின் பின் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil News

Leave a Reply