அமெரிக்கா-கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் மீட்பு

46 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் சான் அன்டோனியோவில் (San Antonio) வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி, திங்கள் மாலை 6 மணியளவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிருந்து அழுகுரல் கேட்டு, பொதுமக்கள் காவல்துறையினருக்கு  தகவல் வழங்கியுள்ளனர்.

காவல்துறையினரின் கண்டெய்னர் லொறியை திறந்து பார்த்தபோது, அங்கே 46 பேர் உயிரிழந்தும் 16 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டும் இருந்துள்ளனர். இதில்  மீட்கப்பட்ட 16 பேரில் 4 பேர் குழந்தைகள் என காவல்துறைங தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News
Tamil News