மன்னாரில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்

515 Views

1 4 மன்னாரில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்

மன்னார் நகர் பகுதியில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு    நேற்று ஞாயிறு (11)  மற்றும் இன்று திங்கள் (12) ஆகிய இரு தினங்கள் தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்றது.

எனினும் இன்றைய (12) தினம் காலை ஏழு மணி முதல் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மற்றும் சென் சேவியர் பெண்கள் கல்லூரியில் நீண்ட நேரம்  வரிசையில் மக்கள் நின்றுள்ளனர்.

ஆனால் தடுப்பூசிகள்  முடிவடைந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டதாக மக்கள்  தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவர்களிடம் வினவிய போது,

“மன்னார் மாவட்டத்திற்கு என வழங்கப்பட்ட 20 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகளில் உயிலங்குளம் மற்றும் முருங்கன் பகுதிகளில் உள்ள வயோதிபர்களுக்கு வழங்கவே சுமார் 300 தடுப்பூசிகள் மிகுதி உள்ளது. ஏனையவை முடிவடைந்து விட்டது.

மேலும் 20 ஆயிரம் ‘கொரோனா’ தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

குறித்த தடுப்பூசிகள் கிடைத்தவுடன் விடுபட்ட 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 மன்னாரில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்

Leave a Reply