மன்னார்-கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி 65 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்

221 Views

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 65 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று   மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் இடம் பெற்றது.

வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர் கலந்து கொண்டதோடு,குஞ்சுக்குளம்,பெரிய முறப்பு ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கள், இளைஞர்கள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர்கள், பொது மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 65 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மேற்படி மடு குஞ்சுக்குளம் பகுதியில் இடம்பெற்றது.

Leave a Reply