கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வழங்கிய நபர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய தூதரகம் மீது குழுவொன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தூதரக அதிகாரி ஒருவருக்கு சந்தேக நபர், தகவலொன்றை அனுப்பியதாக குறிப்பிட்ட அவர், அதன் அடிப்படையில் கொழும்பு – கொள்ளுபிட்டி காவல் நிலையத்தில், இந்திய தூதரக அதிகாரிகள் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க என தெரிவிக்கப்படுகின்றது.