வறிய நாடுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவது பல மடங்காக அதிகரிப்பு- யுனிசெவ்

ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப்பெண்கள் யுவதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடகாலத்தில் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளது என யுனிசெவ் தெரிவித்துள்ளது.

சோமாலியா எத்தியோப்பியா ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு பில்லியனிற்கும்  மேற்பட்ட பெண்களும் பதின்ம வயது யுவதிகளும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனிசெவ் மதிப்பிட்டுள்ளது.

யுத்தமும் கொவிட்டும் அவர்கள் உணவு பெறுவதை கடினமாக்கியுள்ளது என யுனிசெவ் தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் உணவுப்பாதுகாப்பை ஒரு முன்னுரிமைக்குரிய விடயமாக்கவேண்டும் என தெரிவித்துள்ளயுனிசெவ் தோல்வியடைந்துள்ள ஊட்டச்சத்து திட்டங்களை காப்பாற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது என்பது சிறுவர்களின் உடல்நலத்தில் பாதிப்பை  ஏற்படுத்துகின்றது எனவும்யுனிசெவ் தெரிவித்துள்ளது.