இலங்கையில் பாலியல் தொழில் முப்பது வீதம் அதிகரிப்பு-இந்திய ஊடகம் தகவல்

64 Views

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில்,   பாலியல் தொழில் 30 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 22 மில்லியன் மக்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையையும் எதிர்கொள்வதாக இந்திய செய்தி நிறுவனமான ANI செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அன்றாடப் போராட்டத்தினால் பல இலங்கையர்கள் கடும் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் வேலையிழந்துள்ள நிலையில்,” ஸ்பாக்கள்” மற்றும் மசாஜ் வேலை செய்தும் பாலியல் தொழிலாளிகளாககவும் வருமானம் ஈட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறித்த செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply