மகிந்தவின் டுபாய் விஜயம் இரத்து! பொருளாதார நெருக்கடியே காரணம் என்கிறார் யோஷித

462 Views

மகிந்தவின் டுபாய் விஜயம் இரத்துடுபாய் புறப்படுவதற்குப் பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட திட்டம் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 3ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்காக ஜனவரி 2ஆம் திகதி டுபாய் புறப்படுவதற்குப் பிரதமர் திட்டமிட்டிருந்தார்.

எனினும், இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் மகிந்தவின் டுபாய் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply