மகாராஷ்டிரா: நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து விபத்து- 25 பேர் உயிரிழப்பு

இன்று  அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார்.

விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு வந்துகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்ததையடுத்து ஏற்பட்ட தீவிபத்தில் இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply