கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி இந்திய உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக்கோரி மேலும் ஒரு மனு இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் கூறியிருப்பதாவது,

கச்சதீவு இராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சமஸ்தான முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சமஸ்தானத்துக்கு சொந்தமான நிலப்பகுதியை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மீன் வலைகளை உலர்த்தவும், சமையல் செய்யவும் கச்சதீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதுபோன்ற சூழலில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே  1974-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாட்டு பிரதமர்களுக்கும் அதிகாரம் இல்லை. பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறாததால் இது செல்லுபடியாகாது. எனவே கச்சத்தீவை மீண்டும் நமது மத்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என மேலும் கூறப்பட்டுள்ளது.