அமெரிக்கா அன்பளிப்பாக வழங்கிய கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட P627ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் அமெரிக்காவின் சியெட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.

2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட இந்தக் கப்பல், கடற்படையின் செயற்பாட்டுத் தேவைக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நோக்கி கடந்த 03ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.