தமிழ் மக்களின் மனக்காயங்களுக்கு அன்பே உண்மையான மருந்து!” – அமைச்சர் சந்திரசேகர்

Photo 2 தமிழ் மக்களின் மனக்காயங்களுக்கு அன்பே உண்மையான மருந்து!” – அமைச்சர் சந்திரசேகர்

தமிழ் மக்களின் நீண்டகால வேதனைகளுக்கும், அவர்கள் சந்தித்துள்ள உளக்காயங்களுக்கும் அதிகார அரசியலையோ சலுகைகளையோ தாண்டி ‘அன்பு’ ஒன்றே உண்மையான மருந்தாக அமைய முடியும் என்றும், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து நியாயமான தீர்வைப் பெற்றுத்தர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியுடன் பயணிப்பதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (OMP) ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தலைமையில், தேசிய நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.