மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அரசாங்கம் மீண்டும் உறுதி

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைகளத்தில் இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி சமீபத்தில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அதற்கமைய, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த ஆராய்வது தொடர்பான செயற்பாடுகளுக்காக பாராளுமன்றக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, சட்டக் கட்டமைப்பு மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்தவுடன் நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.