367 Views
லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் 90 அகதிகள் பலியானதாக ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது,
ஐரோப்பாவில் அடைக்கலம் அடைய விரும்பிய அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு, லிபியாவிலிருந்து கடந்த வாரம் புறப்பட்ட படகு, மத்தியதரைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய 4 போ் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனா். அந்தப் படகில் சுமாா் 100 போ் இருந்ததாக உயிா்பிழைத்தவா்கள் தெரிவித்தனா். அதையடுத்து, விபத்தில் 90-க்கும் மேற்பட்ட அகதிகள் பலியானது தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.