தியாக தீபம் திலீபனின் தாகத்தை ‘ஈழத் தமிழரின் தேச விடுதலைக்கான அரசியற் களமாக்குவோம் வாருங்கள்’TCC.UK

WhatsApp Image 2022 09 25 at 12.26.09 PM தியாக தீபம் திலீபனின் தாகத்தை 'ஈழத் தமிழரின் தேச விடுதலைக்கான அரசியற் களமாக்குவோம் வாருங்கள்'TCC.UK

தமிழீழத் தேசிய விடுதலையை நெஞ்சமதில் சுமந்து நிற்கும் எமது மக்களே! தியாக தீபம் திலீபனவர்களின்  நினைவெளிச்சி நாளிற்காக எமது தாயகம் எங்கும் தியாகி திலீபனவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி மக்களின் உணர்வுப் பெருக்கோடு வணக்கத்திற்காக தென் தமிழீழம் பொத்துவில்லில் இருந்து வட தமிழீழம் யாழ் நல்லூரை  நோக்கி தியாகதீபம் உயிர் ஈந்த விடுதலைத் தாகம் சுமந்து, இலட்சிய உறுதியுடன் பயணித்து வருகின்றது.

தான் நேசித்த மக்களுக்காக தன்னுயிர் தந்து உலகம் வியக்கும் தியாகச் சுடரின் இதய தாகத்தை ஈழத் தமிழரின் தேச விடுதலைக்கான அரசியற் களமாக்குவோம் வாருங்கள்.

பிரித்தானியாவில்(10 Downing Stree முன்பாக) 26/09/2022  திங்கள் காலை 11மணியில் இருந்து மாலை 5 மணி வரை மனித நேயப் பணி யாளர்களின் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடை    பெறும் சம நேரத்தில் மக்களாகிய நீங்கள்   வருகை தந்து தியாகி திலீபனவர்களுக்கான வணக்கத்தை செலுத்துவதோடு    தாயக விடுதலை மீதான உங்கள் உணர்வினையும்  தாங்கிவருமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.

TCC.UK அரசியற் பிரிவு    தமிழரின் தாகம்         தமிழீழத் தாயகம்