பிரான்ஸ், பரிஸ் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஈழத் தமிழர் பலி

286 Views

பிரான்ஸ் பரிஸ் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இரண்டு ஈழத்  தமிழர்கள் இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் 24 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் 30 வயதான மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த வாள்வெட்டு தாக்குதலானது இரு குழுக்களுக்கிடையிலான பழிவாங்கும் நோக்கத்தில் இடம்பெற்றிருக்கக் கூடும் என பரிஸ் குற்றவியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கான நோக்கத்தை இதுவரை துல்லியமாகக் கண்டறியவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply