தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் 2ம் திகதி யாழில் சந்திப்பு

142 Views

தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் 2ம் திகதி யாழில் சந்திப்பு

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு  இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் 2ம் திகதி யாழில் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.  

இது குறித்து ரெலோவின் ஊடகபேச்சாளர்  சுரேந்திரன்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த கலந்துரையாடல் வரும் 2ம் திகதி நவம்பர் மாதம் காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் பிரகாரம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன்,  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,  ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,  தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா  ஆகியோர் கலந்து கொள்வார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad  தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் 2ம் திகதி யாழில் சந்திப்பு

Leave a Reply