இலங்கையின் சுகாதாரதுறையில் சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து ஆழ்ந்த கரிசனைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் பொதுசுகாதார அமைப்பிற்காக கொள்வனவு செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மருந்துதட்டுப்பாடு என்பது பொருளாதார நெருக்கடியிலிருந்து உருவானது அதேவேளை வலுவான மற்றும் வெளிப்படையான கொள்முறை இல்லாததால் தற்போதைய பிரச்சினை உருவானது என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வெளிப்படையான கொள்முதலை உறுதிப்படுத்தவும் வலுப்படுத்தவும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவசர நடைமுறை மூலம் கொள்வனவு செய்யப்படும் மருந்துகள் உட்பட மருந்துகளை கொள்வனவு செய்யும்போது உயர்தரமருந்துகள் கொள்வனவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை உறுதியான சுயாதீனமான பங்களிப்பை வழங்கவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.