குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று எமது தமிழ் சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்ததாவது,
1.பிடுங்ககப்பட்ட திரிசூலம் மீள நிறுவப்பட்டு, ஆதி சிவன் கோவில் வழிபாட்டுரிமையை மீள பெற வழிவகை கோரல்
2.அகழ்ந்தெடுக்கப்பட்ட எட்டுப்பட்டை தாரா வகை சிவலிங்கம் ஏன் மேலதிக ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை என கேள்வி எழுப்புதல்
3.அதனை சேதப்படுத்தி 3 துண்டாக உடைத்து சட்டவிரோதமாக அமைத்த தாதுகோப உச்சியில் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக தொல்லியல் திணைக்களத்திடம் விளக்கம் கோரல் போன்ற முக்கிய சமர்ப்பணங்களை செய்தால் நன்று என தோன்றுகின்றது.
அதே நேரம் மேற்படி விடயங்களை பாராளுமன்றில் முல்லைத்தீவு தொகுதி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆழமாக வலியுறுத்தி அரசிடம் உடனடி தீர்வை கோர வேண்டும்.
இன்று நீதிமன்றிற்கும் பின்னர் களத்தரிசிப்பிற்கும்பும் மேற்கொண்டு அந்த பிரதேச முன்னாள் இன்னாள் பாராளுமன்ற மாகாண பிரதேச சபை உறுப்பினர்கள் வலுச்சேர்க்குமாறும் கேட்டு நிற்கின்றோம். அனைவருக்கும் இறையாசி வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.