திருமலை மாவட்ட எம்.பி.யாக இன்று பதவியேற்கிறாா் குகதாசன்

kuhathasan திருமலை மாவட்ட எம்.பி.யாக இன்று பதவியேற்கிறாா் குகதாசன்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று காலை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

காலஞ்சென்ற பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் மறைவால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்குக் குகதாசனின் பெயர் கடந்த 2ஆம் திகதி நியமிக்கப்பட்டு, அரச வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.