ஈழத்தமிழரை இனவழிப்புச் செய்து தமிழரின் சுற்றுச்சூழலைச் சிதைத்த கோட்டாபய சுற்றுச் சூழல் பற்றிப்பேச தகுதியுடையவரா?

தமிழரின் சுற்றுச்சூழலைச் சிதைத்த கோட்டாபய

ஈழத்தமிழரை இனவழிப்புச் செய்து தமிழரின் சுற்றுச்சூழலைச் சிதைத்த கோட்டாபய சுற்றுச்சூழல் பற்றிப்பேச தகுதியுடையவரா? என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சர்வதேச அரசசார்பற்ற மனிதவுரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை சபையின் OISL  விசாரணை அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் தமிழ்மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு முக்கிய காரணாமாக இருந்த சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவியில் இருந்த இராணுவ உயரதிகாரிகள் இருந்துள்ளார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஈழத்தில் நடைபெற்ற போரின் போது மனிதகுலத்திற்கு எதிரான மகாபாதகக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று வரையறுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சராக (Defence Ministry) இருந்த மகிந்த இராஜபக்ச, மற்றும் பாதுகாப்புச் செயலாளராக (secretary of defence) இருந்த கோத்தபாய இராஜபக்சவும் அதில் அடங்குவார்கள். கோடூரக்கொலை புரிந்த சகோதரர்கள் இராசதந்திரிகள் என்ற போர்வைக்குள் இன்று ஒழிந்துள்ளனர்.

இன்று ஜனாதிபதியாக சிங்கள பௌத்த இனவாதிகளின் தலைவராக மகுடம் சூடியுள்ள கோட்டாபய இராஜபக்ச தனது இராசதந்திரப் பதவியை தனது பாதுகாப்புக் கவசமாக வைத்துக்கொண்டு  (stateimmunity) எந்தப் பயமும் இன்றி உலகத்தை வலம் வந்துகொண்டு இருகிறார்.

அமெரிக்கா சென்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் உரையாற்றினார். ஒரு இனப்படுகொலையாளி ஐநா மன்றில் உரையாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாட்டைஅம்பலப்படுத்துயுள்ளது. அடுத்த நகர்வாக நவம்பர் 1 ஆம் திகதி, உலகச் சுற்றுச்சூழல் மகாநாட்டில் பங்குபற்ற அழைப்பு விடப்பட்ட நிலையில் ஐக்கிய ராச்சியம் வரவுள்ளார்.

இந்த அமர்விற்கான அழைப்பிதழை பிரித்தானிய அரசு வழங்கியிருக்கிறது. இதைப் போன்று 2009 இற்குப்  பின் இனவாத சிறிலங்கா அரச சனாதிபதிகள் மகிந்த இராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன போன்ற இனவாதிகள் ஐக்கிய இராச்சியத்துக்கு சுதந்திரமாக வந்து சென்று இருக்கிறார்கள்.

இது பிருத்தானிய அரசால் ஐக்கிராச்சியத்தில் வசிக்கும் ஐந்து இலட்சம் தமிழ்மக்களை உதாசீனம் செய்து அவர்களை அவமதிக்கும் செயலாகும். 1948 ஆம் ஆண்டு சிலோனில் இருந்து வெளியேறும்போது தமிழர்களுக்கான தீர்வை தகுந்த முறையில் வழங்காமல் நட்டாற்றில் இட்டுச்சென்றவர்கள் தொடர்ந்தும் தமிழர்களுக்கு நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தடுக்காமல் உள்ளனர். இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்காக சிறிலாங்கா அரசிற்கு முண்டுகொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில், ஈழத்தமிழர் பிரதேசத்தில் தமிழ் மக்களை இனவழிப்புச் செய்தது மட்டும் இன்றி, உலகத்தில் தடை செய்யப்பட்ட மனித குலத்திற்கு நாசம் விளைவிற்கும் ஆயுதங்களையும் நச்சு வாய்யுக்களையும் பயன்படுத்தி தமிழர்களைக் கொன்று குவித்ததோடு அவர்கள் வாழும் பகுதியின் சுற்றச்சூலையும் அழித்த கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ச இந்த மாநாட்டில் பங்குபற்றுவது என்பது பொருத்தமற்ற விடயமாகும்.

ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்காகப் போராடிய சேர். வில்லியம் வாலஸ் பிறந்த மண்ணில் காலடி எடுத்துவைக்கும் இனப்படுகொலையாளிக்கு தகுந்த பாடம் புகட்ட தமிழ்மக்கள் மாத்திரம் இன்றி இனவிடுதலைக்காகப் போராடும் அனைத்து மக்களையும் இணைத்து பெரிய அளவிலான எதிர்பலையை ஏற்படுத்த வேண்டும்.

ஆகவே பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கு உலக தமிழர் சார்பில் நாம் விடுக்கும்வேண்டுகோள்! தமிழின அழிப்பிற்கு முக்கிய காரணாமாக இருந்தது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாகத் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தொடர்ந்து நடாத்தி தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் குற்வாளியை ஸ்காட்லாந்து நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுக்குமாறு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad ஈழத்தமிழரை இனவழிப்புச் செய்து தமிழரின் சுற்றுச்சூழலைச் சிதைத்த கோட்டாபய சுற்றுச் சூழல் பற்றிப்பேச தகுதியுடையவரா?