கோட்டா, மஹிந்தவின் உருவ பொம்மைகளை கூண்டில் அடைத்து மாத்தறையில் போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச இருவரது பொம்மை உருவங்களும் கூண்டில் அடைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டா தலைமையிலான அரசை வீட்டு அனுப்பும் போராட்டம் இலங்கையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் (26) மாத்தறை நகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறு இருவரும் கூண்டில் அடைக்கப்பட்டது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகிய இருவரது உருவப் பொம்மைகளை மூடப்பட்ட கூண்டுக்குள் சிறைப்படுத்தி மாத்தறை மக்களால் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் உருவப் பொம்மையின் சட்டைப் பையில் இவர்களால் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்காளன லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் மற்றும் சிலரது முகங்கள் பதிக்கப்பட்ட பதகங்கங்கள் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் பதுளையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று (26) அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். Tamil News