திருகோணமலை-குடி நீர் இன்றி பாதிக்கப்படும் கிண்ணியா மக்கள்

220 Views

குடி நீர் இன்றி

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி_01 வள்ளுவர் வீதியில் வசித்து வரும் குடும்பங்களுக்கு குடி நீர் இன்றி வாழ்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 30 குடும்பங்கள் குடி நீர்  நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.1996 களில் இருந்து தற்போது வரை குடி நீர் இன்மையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப் பகுதியில் உள்ள கிணற்று நீரினை அருந்துவதால் சிறு நீரக நோய்,வாந்தி பேதி உள்ளிட்ட  நோய் ஏற்படுவதாகவும் சிறு பிள்ளைகளுக்கும்  பாதிக்கப்படுவதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதியில் பிரதான நீர் குழாயினை பொருத்தி தருவார்களேயானால் தாங்கள் சொந்த பணத்தில் குடி நீர் இணைப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தங்கள் பகுதிக்கான குடி நீரினை பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளுக்கு அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply