288 Views
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வரலாற்றில் அதிபர் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டும் அமெரிக்க பொறுப்பு அதிபராக செயல்பட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே அதிபர் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழக்கமான உடல்நலம் சார்ந்த மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட போது, சிறிது நேரம் தன் அதிபர் அதிகாரத்தை, கமலா ஹாரிஸுக்கு வழங்கியுள்ளார்.
சிகிச்சைக்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் தனது கடமைகளைச் செய்யும் திறனோடு இருக்கிறார் என்றும் பைடனின் மருத்துவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பு வரலாற்றில் இது போன்று தற்காலிக அதிபர் பொறுப்பு நிகழ்வு 2005, 2007 ஆண்டுகளில் ஜோர்ஜ் டபிள்யு புஷ் அதிபராக இருந்த போது நடந்ததாகக் கூறப்படுகிறது.