நீதித்துறை ஓய்வு வயது நீட்டிப்பு நடவடிக்கை: கூட்டு எதிர்க்கட்சி அதிருப்தி!

அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு, நாட்டின் போற்றப்படும் ஜனநாயக நிறுவனங்கள் மீதான ஒரு கடுமையான தாக்குதலாக அமையும் என்று கூட்டு எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

நீதிமன்ற சுதந்திரத்தை சீர்குலைக்கும் தீய நகர்வுகளை முறியடிப்போம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய அவர், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று குறிப்பிடும் அரசியலமைப்பின் 107(5) பிரிவைத் திருத்துவதன் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65-லிருந்து 67-ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
அரசு இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தால், அது நாட்டின் ஜனநாயகக் கலாச்சாரம் மற்றும் நிறுவனங்கள் மீதான கடுமையான தாக்குதலாக அமையும் என்று அவர் கூறினார்.