ஊடகவியலாளர் சுலக்சனுக்கு கொலை அச்சுறுத்தல்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம்

369 Views

ஊடகவியலாளர் சுலக்சனுக்கு கொலை அச்சுறுத்தல்

ஊடகவியலாளர் சுலக்சனுக்கு கொலை அச்சுறுத்தல்: ஊடகவியலாளர் சுலக்சன் மீதான கொலை அச்சுறுத்தலிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி இது குறித்து தெரிவித்துள்ளதாவது,

உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜெயச்சந்திரன் சுலக்ஸனுக்கு பருத்தித்துறை காவல் நிலையத்தில் வைத்து   துப்பாக்கி முனையில்   கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை காவல் நிலையத்திற்குள் வைத்துஇ துப்பாக்கியை நீட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான முறைப்பாட்டை காவல்  நிலைய பொறுப்பதிகாரி ஏற்க மறுத்துள்ளார். எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்தே முறைப்பாட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

காவல் நிலையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள  CCTV பதிவை பரிசோதிக்குமாறும், ஊடகவியலாளரால் மனித உரிமைகள் ஆணைக்கிழுவின் பிராந்திய இணைப்பாளர் வு.கனகராஜிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேற்படி ஊடகவியலாளர் மீதான கொலை அச்சுறுத்தலை வன்மையாக கண்டிக்கின்றோம்” என்றுள்ளது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad ஊடகவியலாளர் சுலக்சனுக்கு கொலை அச்சுறுத்தல்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம்

Leave a Reply