எந்த விவாதத்துக்கும் இடமின்றி கூட்டு ஆவணம் கைச்சாத்தாகும்; சம்பந்தன் திட்டவட்ட அறிவிப்பு

441 Views

எந்த விவாதத்துக்கும் இடமின்றி
இந்தியாவுக்கு அனுப்பவுள்ள கூட்டு ஆவணம் எந்த விவாதத்துக்கும் இடமின்றி கைச்சாத்திடப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அந்த ஆவணம் தொடர்பிலான செயல்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் எனத் தாம் எதிர்பார்க்கிறார் என்று நேற்றுக் கூறினார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்பதனால் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துகிறுாம். வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளார் என்றும் முஸ்லிம் மக்களின் சகல விடயங்களும் ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டு இந்த செயல்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Tamil News

Leave a Reply