யப்பானின் பொருளாதர வளர்ச்சி பாதிக்கப்படும் – அனைத்துலக நாணய நிதியம்

பொருளாதர வளர்ச்சி பாதிக்கப்படும்

பொருளாதர வளர்ச்சி பாதிக்கப்படும்

உக்ரேனில் இடம்பெற்று வரும் போரினால் யப்பானின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்படும் என அனைத்துலக நாணய நிதியம் கடந்த வியாழக்கிழமை (7) தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி 3.3 விகிதமாக முன்னர் கணிப்பிடப் பட்டிருந்த போதும் அது தற்போது 2.4 விகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போது உக்ரேனில் இடம்பெற்றுவரும் போரினால் உலகின் பொருளாதாரம் ஒரு விகித வீழ்ச்சியை காணும் எனவும், அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளினதும், ஆசிய நாடுகளினதும் பொருளாதாரம் வீழ்ச்சி காணும் எனவும் அனைத்துலக நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.