இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக ஜப்பான் உறுதி – ஜனாதிபதி

191 Views

இலங்கையின் அபிவிருத்தியை நோக்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி உறுதியளித்துள்ளார் என ஜனாதிபதி கோட்டாபய   தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை ஜப்பான் தொடர்ந்து பேணுவதாகவும் ஜப்பானின் தூதுவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply