இலங்கையில் இருந்து மேலும் 4 ஈழத்தமிழ் அகதிகள் தமிழகம் வருகை

மேலும் 4 ஈழத்தமிழ் அகதிகள் தமிழகம் வருகை

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள  தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில்  தமிழகத்தின் தனுஷ்கோடி, இராமேஸ்வரம் ஆகிய கடலோர பகுதிகளுக்கு வருகை தரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அகதி தஞ்சம் கோரி வரும் தமிழர்களை அகதிகளாக பதிவு செய்யாமல் மணடபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவில் தனுஷ்கோடி கடல் நான்காம் மணல் திட்டில் படகோட்டிகளால் இறக்கிவிடப்பட்ட சிறுவன் உட்பட 4 தமிழர்களை காவல்துறையினர் மீட்டு, விசாரணையின் பின் அவர்களை மண்டப முகாமில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamil News