யாழ். பல்கலை ஊழியர் சங்கமும் மௌன தொழிற்சங்கப் போராட்டம்

329 Views

மௌன தொழிற்சங்கப் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இன்று
மௌன தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது என அதன்
தலைவர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

Gallery

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்ட காலமாக நிலவி வரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு 23.11.2021இல் வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேற்படி அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

அந்தவகையில் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கின்ற எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இன்று (02.12.2021) நண்பகல் 12 மணிக்கு மேற்படிப் போராட்டத்தை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றிலில் கொரோனா சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து முன்னெடுக்கவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

எனவே, சகல கல்விசாரா ஊழியர்களையும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம் – என்றுள்ளது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad யாழ். பல்கலை ஊழியர் சங்கமும் மௌன தொழிற்சங்கப் போராட்டம்

Leave a Reply