யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பம்

பொலிஸாரின் தடைகளையும் மீறி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணி !

வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலுடன் இன்று காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டகளப்பு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காலை வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து சேவையிலீடுபவோர், திரையரங்குகள் உட்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜர்தால் குறித்த அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தரப்புக்களும் ஆதரவு நல்கியுள்ள நிலையில் இன்றையதினம் அவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பேரெழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தின் ஆரம்பத்தில் காவல்துறையினர் தடுப்பதற்கு முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் தடைகளை உடைத்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு போராட்டம் ஆரம்பமானது.

இந்த போராட்ட பேரணியானது எதிர்வரும் 7ம் திகதி மட்டக்களப்பு மண்ணில் சிறப்பாக நிறைவடையவுள்ளது.