யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு

சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  யாழ்ப்பாண  பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி  ஏற்றப்பட்டுள்ளது.