வறுமையால் வாடும் மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம் தமிழில்: ஜெயந்திரன்

341 Views

பணத்தை அபகரிப்பது தமிழில்: ஜெயந்திரன்

மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம்

அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆப்கான் சொத்துகளை கையகப்படுத்துகின்ற முற்றிலும் நியாயமற்ற முடிவை அந்த நாடு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், அமெரிக்கா தொடர்பான தங்கள் கொள்கையை தாம் மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும் என்று ஆப்கானிலுள்ள தலிபான் அமைப்பு கடந்த திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அமெரிக்காவில் வைப்பில் வைக்கப் பட்டிருக்கின்ற 7 பில்லியன் அமெரிக்க நிதியை, அமெரிக்கா தான் விரும்பிய வழியில் பகிர்ந்தளிப் பதற்கான ஒரு நிறைவேற்றக் கட்டளையில் கடந்த வெள்ளிக்கிழமை பைடன் ஒப்பமிட்டார்.

இந்த சொத்துக்களில் அரைவாசி செப்டெம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருக்கிறது. மற்றைய பகுதி ஆப்கான் மக்களின் நலனைக் கவனிப்பதற்கான ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்படவிருக்கிறது. அமெரிக்காவின் மேற்குறிப்பிட்ட முடிவு ஆப்கான் மக்களை வெகுண்டெழச் செய்தது மட்டுமன்றி, பன்னாட்டுச் சமூகத்தினர் மட்டிலும் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.

பணத்தை அபகரிப்பது ஆப்கான் மத்திய வங்கியின் சொத்துகளை கடந்த வருடம் அமெரிக்கா முடக்கிய பொழுது, பன்னாட்டுச் சமூகம் தமது பரவலான அதிருப்தியை வெளியிட்டது. அதற்கான காரணம் என்னவென்றால், கடந்த காலங்களில் மற்றைய நாடுகளின் சொத்துகளையும் எந்தவொரு நீதிநியாயமும் இன்றி அமெரிக்கா முடக்கியிருந்தது. இவற்றின் காரணமாக அந்த நாடுகளில் கடும் மனிதப்பேரிடர் தோற்றுவிக்கப்பட்டது. இது எவ்வாறு இருப்பினும் அமெரிக்காவின் செயற்பாடு கற்பனைகளையெல்லாம் கடந்துவிட்டது. குறிப்பிட்ட நிதியைத் திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக அமெரிக்கா தான் விரும்பியபடி அந்த நிதியை தமது மக்களுக்குப் பகிர்ந்தளித்தது. இவை எல்லாவற்றிலும் மோசமான விடயம் என்னவென்றால் செப்டெம்பர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட விருக்கும் 3.5 பில்லியன் நிதி, அமெரிக்கா இப்பணத்தைப் தனது சொந்தப் பைகளுக்குள் போடுவதற்குச் சமனானதாகும்.

பணத்தை முடக்குவது என்றாலும் சரி, அல்லது பகிர்ந்தளிப்பது என்றாலும் சரி, தனது உள்நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏனைய நாடுகளின் சொத்துகளை தாம் விரும்பியபடி கையாள்வதற்கு அமெரிக்காவுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. இவ்வாறான செயற்பாட்டுக்கு எந்தவிதமான சட்டபூர்வமான நியாயமோ அன்றேல் அறநெறி ரீதியிலான நியாயமோ இல்லை. மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானின் சொத்துகளை வெளிப்படையாகக் கொள்ளை யடிக்கின்ற அமெரிக்காவின் காட்டுமிராண்டித் தனமான செயற்பாடு 2022ம் ஆண்டிலே நடப்பது என்பது துளியளவும் சிந்தித்துப் பார்க்க முடியாத ஒரு விடயமாகும். அமெரிக்காவின் கையில் இருக்கின்ற இந்த நிதிசார்ந்த ஏகபோகம்  மிகவும் ஆபத்தானதும் அதே வேளையில் உலகில் உறுதியற்ற தன்மையை உருவாக்கவும் வல்லது என்பதுடன் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டியதொன்றும் ஆகும்.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் 7பில்லியன் டொலர்கள் ஒரு பெரிய விடயமாக இருக்க முடியாது. இந்த நிதியைக் கொண்டு மூன்று பி-2 ரக குண்டு வீச்சு விமானங்களை அதனால் கொள்வனவு செய்ய முடியும். ஆனால் ஆப்கான் மக்களைப் பொறுத்த வரையில் இந்த நிதி அவர்களது உயிர்களைக் காப்பது தொடர்பானது. வெளிநாடுகளில் வைக்கப்பட்டிருக்கும் ஆப்கான் சொத்துகளை முடக்குவது, ஆப்கான் மக்களை பல தலைமுறைகள் பின்னோக்கிக் கொண்டு செல்லும் என்று ஆப்கானுக்கான ஐநாவின் விசேட பிரதிநித டேபொறா லியோன்ஸ் (Deborah Lyons) எச்சரிக்கை விடுத்தார்.

பணத்தை அபகரிப்பது தற்போது, அரைவாசிக்கு மேற்பட்ட ஆப்கான் மக்கள் கடுமையான பசியை எதிர் கொண்டிருக்கும் அதே வேளை மில்லியன் கணக்கிலான சிறுவர்கள் போசாக் கின்மையால் நாளாந்தம் இறந்து கொண்டிருக் கிறார்கள். பல சிறுவர்கள் எந்தவித சிகிச்சையையும் பெற முடியாமல் தவிக்கிறார்கள். அது மட்டுமன்றி கல்வி, மற்றும் சமூகக்கட்டமைப்புகள் முற்றாகச் செயலிழக்கும் நிலையில் இருக்கின்றன. இவ்வாறான ஒரு காலப்பகுதியில் ஆப்கான் மக்களின் பணத்தைக் களவாடுவது தொடர்பாக அமெரிக்க அரசியல்வாதிகளின் மனச்சாட்சி உறுத்தவில்லையா? உண்மையில் அமெரிக்க அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா என்பதும் இன்னொரு கேள்வியாகும்.

‘ஆப்கான் மக்களின் உயிர்களும் உயிர்கள் தான்’ என்பதை உணர்வதற்குரிய அடிப்படை மனிதாபிமானம் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு இருக்குமாயின், தாம் நிச்சயமாக உயிர்பிழைப்போம் என்று நம்புகின்ற ஆப்கான் மக்களின் நம்பிக்கையை அவர்கள்  பறிக்கக்கூடாது. குறிப்பாக ஆப்கான் நெருக்கடியைத் தோற்றுவித்தவர்கள் என்ற வகையில், தற்போதைய சூழலில் ஆப்கான் மக்களுக்கு உதவவேண்டிய தார்மீகக் கடமை அமெரிக்காவுக்கு நிச்சயமாக இருக்கிறது. ஆப்கானில் முன்னெடுக்கப்பட்ட போரின் போது, 30,000 அப்பாவிப் பொதுமக்கள் அமெரிக்க இராணுவத்தால் அங்கு கொல்லப்பட்டதுடன், 11 மில்லியன் மக்கள் அகதிகள் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். ஆப்கானிலே போரிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக தனது 700 பில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்புப் பாதீட்டின் ஒரு பகுதியை வழங்கினாலென்ன என்று கேட்கத் தோன்றுகிறது.

ஆப்கான் மக்களின் உயிர்காக்கும் சொத்துகளை திருப்பிக் கொடுக்காமல் வைத்திருப்பதற்காக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவைக் கண்டித்திருக்கும் அதே வேளை மனித உரிமைகள் தொடர்பாக அதிகம் மார்தட்டுகின்ற மேற்குலக நாடுகளோ இவ்விடயம் தொடர்பாக அமைதி காக்கின்றன. ஆப்கான் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை இன்னும் அதிகமாக்கி, சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு ஒழுங்கு என்பது பலவீமானவர்களையும் நீதியின்படி ஒழுகுகின்றவர்களையும் பாதுகாப்பதற்கல்ல, மாறாக, வல்லரசுகளையும் அவற்றின் ஏகபோகங்களையும் பாதுகாப்பதற்கே உருவாக்கப்பட்டவை என்பது வெள்ளிடைமலையாகிறது.

பணத்தை அபகரிப்பது ஆப்கான் சொத்துகளைக் களவாடும் அமெரிக்காவின் நடவடிக்கையை நாம் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஆப்கான் மக்களுக்குச் சொந்தமான சொத்துகள், எந்தவித நிபந்தனையும் இன்றி ஆப்கான் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் ரீதியாகவும் அறநெறி ரீதியாகவும் மிகப் பலமான ஒரு கருத்துருவாக்கத்தை மேற்கொண்டு அமெரிக்கா மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டுமென்று மனச்சான்றின் படி நடக்கின்ற நாடுகளுக்கும் பன்னாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். ஆப்கான் மக்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்டி, ஆப்கானின் வரலாற்றின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி நிகழ்வதைத் தடுப்பதற்காக உயிர்காக்கும் இந்த சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் ஐக்கிய நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

எப்படிப் பார்த்தாலும் இது அமெரிக்கா ஆப்கான் மக்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாகும் என்பது மட்டுமன்றி என்றோ ஒரு நாள் அமெரிக்கா இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தித் தான் ஆகவேண்டும்.

நன்றி: globaltimes.cn

Tamil News

1 COMMENT

  1. […] மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம்: அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆப்கான் சொத்துகளை கையகப்படுத்துகின்ற முற்றிலும் நியாயமற்ற முடிவை அந்த நாடுமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-171-february-27/ https://www.ilakku.org/  […]

Leave a Reply