அதானி குழுமம் இலங்கையில் 100 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்

இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.