“இந்தியாவிற்கு டெல்லியில் இருந்து மும்பை வரை தோல்வி கிடைத்துள்ளது, இந்தியாவால் அதனை மறக்க முடியாது.”என பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் படைகள் ‘உண்மைப் போரை’ வென்றதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
ஹரிபூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷெபாஸ் ஷெரிஃப் கைபர் பக்டுன்குவா மக்கள் தைரியமானவர்கள் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தப் பிராந்திய மக்கள் பல பத்தாண்டுகளாக “தீவிரவாதிகளுக்கு” எதிராக போராடி வருகிறார்கள் என்றும் அவர்களின் “தியாகங்களால்” தான் நாட்டில் அமைதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது உரையில் பாகிஸ்தான் ‘திவால்’ நிலையை தவிர்த்ததாகவும் பொருளாதாரம் தற்போது சரிவிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மே 6 மற்றும் 7-ஆம் தேதி இரவுகளில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூரை’ நடத்தியது.
இந்த காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்த ‘தீவிரவாத முகாம்கள்’ தாக்கப்பட்டு ‘அழிக்கப்பட்டதாக’ இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.



