இஸ்ரேலின் பங்கு வொஷிங்டனால் தீர்மானிக்கப்படும் – சாத்தம் ஹவுஸ்

ஈரானுடன் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலின் பங்கு வொஷிங்டனால் தீர்மானிக்கப்படும் என்று சாத்தம் ஹவுஸின் (பிரித்தானியாவைச் சேந்த சிந்தனைப் பள்ளி) மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்டத்தின் மூத்த ஆலோசகரான யோசி மெக்கெல்பர்க் கடந்த வியாழக்கிழமை(18) தெரிவித்ததுள்ளார்.
நெதன்யாகுவை “ஒரு அற்புதமான பிரதமர்” என்று வர்ணித்த மற்றும் லெபனான் மீதான அவர்களின் கருத்து வேறுபாடுகளைக் குறைத்து மதிப்பிட்ட ட்ரம்பின் முந்தைய கருத்துக்களைக் குறிப்பிட்ட மெக்கெல்பர்க், “போரை எவ்வாறு தொடர்வது என்பது குறித்து அவர்களுக்குள் உண்மையான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும்”, ட்ரம்ப் “நெதன்யாகுவிடம் சற்று மென்மையாக நடந்து கொண்டார்”. வரவிருக்கும் தேர்தல் காலத்திற்கு முன்னதாக, இஸ்ரேல் என்ன சாதித்துள்ளது என்பது குறித்து இப்போது அங்கு ஒரு விவாதம் தொடங்கும்.
“கடந்த இரண்டரை ஆண்டுகளையும், பல முனைகளில் கிட்டத்தட்ட அதிகபட்ச சக்தியைப் பயன்படுத்தியும் ஒரு தீர்க்கமான முடிவு இல்லாமல் இஸ்ரேல் உண்மையில் என்ன சாதித்தது என்பதையும் அனைவரும் பார்ப்பார் கள்,”. “பேச்சுவார்த்தையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தி லும் இஸ்ரேல் ஈடுபடுத்தப்படாமலேயே முடிவு தீர்மா னிக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் 60 நாள் பேச்சு வார்த்தையில், இஸ்ரேல் எந்த அளவிற்கு ஈடுபடும் என்பது எங்களுக்குத் தெரியாது. அடிப்படையில், அது ட்ரம்ப் நிர்வாகத்தால் அதற்கு ஆணையிடப்படும்.”
இஸ்ரேலில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிலும், இந்தப் போர் ஒரு “தோல்வி” என்ற மனநிலையே நிலவியது. இஸ்ரேல் “ஓரங்கட்டப்பட்டது” மட்டுமல்லாமல், நெதன்யாகு அறிவித்த போர் நோக் கங்களான ஈரானில் ஆட்சி மாற்றம், அதன் அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவைத் துண்டித்தல் மற்றும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறனைக் குறைத்தல் ஆகிய வற்றில் எதுவும் அடையப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.