ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாராகின்றது இஸ்ரேல்

93 Views

ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தனது அமெரிக்கத் தயாரிப்பான மிக நவீன எப்-35 ரக தாக்குதல் விமானங்களை இஸ்ரேல் தயார்படுத்தி வருவதாக யெருசலோம் போஸ்ட் இந்த வாரம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள எப் -35 விமானங்கள் மூலம் இஸ்ரேலில் இருந்து சென்று ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டுமெனில் அதன் பறப்பு தூரவீச்சை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் நடுவானில் வைத்து அதற்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்.

அமெரிக்காவின் விமானங்களை தரமுயர்த்தி அதனை 10,000 கி.மீ தூரத்திற்கு எரிபொருள் நிரப்பாது பறப்பில் ஈடுபடுத்தியுள்ளது இல்ரேலின் வான்படை. புதிதாக தரமுயர்த்தப்பட்ட விமானங்கள் உட்பட 100 இற்கு மேற்பட்ட தாக்குதல் விமானங்களை ஒருங்கிணைத்து இஸ்ரேல் கடந்த வாரம் மெடிற்றிரேனியன் கடற்பகுதியில் பயிற்சி நடைவடிக்கைகளில் ஈடுபட்டுடிருந்தது.

இந்த விமானங்களில் இஸ்ரேலின் ரபேல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு தொன் எடையுடைய குண்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன. ரடார்களில் இருந்து தப்பும் இந்த விமானத்தின் தரத்தை பேணுவதற்காக குண்டுகளை விமானத்தின் உள்ளே பொருத்தியுள்ளது இஸ்ரேலின் வான்படை.

Tamil News

Leave a Reply