நெடுங்கேணி எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணைக்காக மக்களின் பணம் சுரண்டப்படுகின்றதா?

327 Views

IMG 20220404 095830 நெடுங்கேணி எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணைக்காக மக்களின் பணம் சுரண்டப்படுகின்றதா?

வவுனியா நெடுங்கேணி எரிபொருள் நிலையத்திலுள்ள மண்ணெண்ணை பெற்றுக்கொள்ளும் இயந்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் விலை தெளிவில்லை அதேபோல மறுபக்கத்தில் விலை தெரியவில்லை. இதனால் மக்கள் பணம் அதிகளவில் சுரண்டப்பட்டு வருவதாகவும் இதனைத்தடுத்து நிறுத்தி சீரமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு நெடுங்கேணிப்பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணையைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து பெற்றுக்கொண்டபோதும் அங்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தில் மண்ணெண்ணையின் விலை தெளிவாக காட்சிப்படுத்தப்படவில்லை .

கடமையிலுள்ள ஊழியர் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எவ்வளவு பணத்திற்கு மண்ணெண்ணை நிரப்புகின்றார்கள் என்பதை சரியாகக் கணித்துக்கொள்ள முடியவில்லை. கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு செல்லும் விவசாய மக்களை கொண்ட குறித்த பகுதியில் இது பெரும் அவலை நிலையாகவும் மக்களின் பணம் சுரண்டப்பட்டு வருவதும் தெரியவருகின்றது.

எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply