கோட்டா அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு – வெளிநாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டம்

as கோட்டா அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு - வெளிநாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று தற்போதைய அரசு பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையில் பரவலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் மற்றும் அரசையும் பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.

அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி, நியூசிலாந்து, கனடா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட மக்கள், “கோட்டா வீட்டுக்கு போ” என்ற கோஷத்தையும் எழுப்பினர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இலங்கை மக்கள் அரசுக்கு எதிராகச் சுயமாகத் திரண்டு போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை மக்களின் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.