ஈரான் இராணுவ உயரதிகாரி சுட்டுக் கொலை

134 Views

ஈரானில் அதிகாரம் மிக்க ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையை சேர்ந்த கர்னல் நிலையிலான அதிகாரி ஒருவர் தெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சயாத் கொதாய் என்ற அந்த அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகின்றது. அவரது வீட்டுக்கு வெளியிலேயே இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இதுவரை இந்த செயலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சுட்டுவிட்டுத் தப்பியவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. 2020ம் ஆண்டு அந்நாட்டின் முன்னணி அணுக்கரு விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டில் நடந்த பெரிய அதிர்ச்சிகரமான படுகொலை இது.

Tamil News

Leave a Reply