ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா

ஓமானில் சனிக்கிழமை(12) இடம்பெறும் பேச்சுக்கள் தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும், அதற்கு இஸ்ரேல் தலைமை தாங்கும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் கடந்த புதன் கிழமை(9) தெரிவித்துள்ளார்.
எனது மனதில் ஒரு எல்லை உள்ளது. அந்த எல்லைக்குள் அணுவாயுதத் தவிர்ப்பு தொடர்பான உடன்பாட்டுக்கு ஈரான் வரவேண்டும். பேச்சுக்கள் தோல்வியடைந் தால் நிச்சயமாக தாக்குதல் ஆரம்ப மாகும். இரு தரப்புக்களுக்கும் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை(9) ஓமானில் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ளன. அது நேரடி யான பேச்சுக்கள். ஓமானில் இடம் பெறும் பேச்சுக்கள் ஒரு ஆரம்பமே ஆனாலும் எனது மனதில் ஒரு காலஎல்லை உள்ளது. ஈரான் அணு வாயுதத்தை பெறுவதை நாம் அனுமதிக்க முடியாது. பேச்சுக்கள் தோல்வியடைந்தால் அது ஈரானுக்கு மோசமான நாளாக அமையும்.
படை நடவடிக்கை தேவைப்பட்டால் நாம் அதனை மேற் கொள்வோம் அதில் இஸ்ரேலின் பங்கு அதிகமாக இருக்கும் அவர்கள் தான் தலைமை தாங்குவார்கள் என ட்றம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுவாயுத திட்டத்தை மட் டுப்படுத்தும் இணைந்த நடவடிக்கை, Joint Comprehensive Plan of Action (JCPOA) என்ற உடன்பாட்டு ஒன்று முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  அதற்கு பதிலாக ஈரான் மீதான தடைகள் நீக்கப் பட்டிருந்தன. ஆனால் ட்றம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அதில் இருந்து அமெரிக்கா விலகியதுடன், ஈரான் மீது அதிக தடைகளும் விதிக்கபட்டிருந்தது.
தற்போது ட்றம்ப் பதவியேற்றதும் ஈரான் மீது அதிக தடைகள் கொண்டுவரப்போதவாக அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன், ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்தெல்லா அலி ஹமானிக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால் தாம் அமெரிக்காவுடன் தற்போது நேரடியற்ற பேச்சுக்களை மேற்கொள்ளவே விரும்புவதாகவும், ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட் டாலே உத்தியோகபூர்வமான  பேச்சுக்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் ஈரான் தெரி வித்துள்ளது.