ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு ஈரான் விதித்து ள்ள கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த விலக்கு வழங்கப் பட்டுள்ளதாக ஈரானிய நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலக்குகள் ஈரானின் நலன்களைக் கருத்தில் கொண்டே வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விஷயத்தில், மருந்துகளை இறக்குமதி செய்வதை எளிதாக்குவதற்காக இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத்-மொகத்தம், செவ்வாய்க்கிழமை அன்று ஈரானிய மாணவர் செய்தி முகமையிடம் (ISNA) தெரிவித்தார். சீனாவின் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக சீனக் கப்பல்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ள ஈரானுக்கு, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது; மேலும், இவை ஈரானைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்த முக்கியமான நீர்வழிப் பாதையில் ஈரான் கடல் போக்கு வரத்தைக் கட்டுப்படுத்தியது. இதற்குப் பதிலடியாக, ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா கடற்படை மூலம் முற்றுகையிட்டது. பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணை, இந்த மோதலுக்கு முன்பு உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கையாண்டு வந்தது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது; இதில் சுமார் 30 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே வருகிறது. இந்தியாவின் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) இறக்குமதியில் பெரும்பகுதியும் இந்த வழித்தடம் வழி யாகவே நடைபெறுவதால், இந்தியாவின் எரிசக்தி விநியோகத்திற்கு இது மிக முக்கியமான பாதையாக உள்ளது.



